அங்கு சென்றதன் மூலம் நான் அறியக் கிடைத்த தகவல்கள் பின்வருமாறு:
800 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது, ராஜ ராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டுள்ளது.
அப்பொழுது அந்த இடத்தின் பெயர் கண்ணம்பாடி. கண்ணம்பாடி தற்போது உள்ள KRS அணைக்கட்டின் நீர்த்தேக்கத்தின் ஒரு பகுதியாகும்.
1912 - 1924 ல் கிருஷ்ணராஜா சாகர் என்றவரால் இந்த அணைக்கட்டு கட்டப்பட்டது. இதற்க்கு பொறியாளராக பணியாற்றியவர் இந்தியாவின் தலைசிறந்த பொறியாளர்களில் ஒருவரான விஷ்வேஸ்வராயர்.
இந்த அணையின் நீரத்தேக்கத்திற்காக 30 க்கும் அதிகமான கிராமங்கள் எடுத்துகொள்ளப்பட்டதாக அறியப்படுகிறது. அதில் ஒன்று கண்ணம்பாடி. இந்த கிராமங்களில் உள்ள மக்கள் பல்வேறு இடங்களுக்கு குடிபெயர்த்து சென்றனர். (ஹொசா கண்ணம்பாடி).
அணையின் நீர்வரத்து குறைந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

இது நம்ம ஊரு ஆட்டுக்கல்.
இந்த அணை கட்டியபிறகு வேணு கோபாலசுவாமி கோவில் நீரில் மூழ்கிவிட்டது.
2003 ம் ஆண்டு நீர்வரத்து குறைந்த பொழுது அருகில் உள்ள கிராமத்து மக்களால் காணப்பட்டது. தற்பொழுது பெங்களூரில் உள்ள KHODAYS க்ரூப்ஸ்பின் M.D. ஸ்ரீ ஹரி கொடேய் என்பவரால் இந்த கோவில் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.

காவேரி நதி (KRS அணையின் நீர்த்தேக்கம்)



புதுப்பிக்கப்பட்டு வரும் கோவில்


அடுத்த வாரம் அடுத்த இடம்...

2 comments:
Good mapla .
Hi anna.. kalakura po.. Great Job...
Post a Comment